Mutual Fund Is Risk (மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு ரிஸ்க் நிறைந்ததா)

Mutual Fund Is Risk (மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு ரிஸ்க் நிறைந்ததா)

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டு ரிஸ்க் &  முதலீட்டாளரின் ரிஸ்க் புரொபைல்

Mutual Fund Investment Risk & Investor Risk Profile

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு ரிஸ்க் நிறைந்ததா:

நாம் செய்கின்ற எல்லா முதலீடுகளுமே ரிஸ்க் நிறைந்தது. அவற்றின் இயல்பும் அளவும் மட்டுமே மாறுபடுகிறது. இது மியூச்சுவல் ஃபண்ட்டுக்கும் பொருந்தும்.
முதலீட்டடின் மீதான வருவாயில் எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களும் ஒரே ரிஸ்க்கை கொண்டிருப்பதில்லை.

பணவீக்கம் என்பது ஒரு ரிஸ்க். இந்த பணவீக்கத்தை தோற்கடிக்கும் சிறந்த முதலீட்டு வகை "ஈக்விட்டி ஃபண்ட்கள்".

ஈக்விட்டி ஃபண்ட்கள் :

நீண்ட கால முதலீட்டின்போது சிறந்த ரிட்டர்ன்களை வழங்ககூடியது. எனவே சில ரிஸ்க்குகளை எடுப்பதும் பலன் அளித்திடும்.

லிக்விட் ஃபண்ட்கள் -:

ஈக்விட்டி ஃபண்ட்களுடன் இருக்க கூடிய ரிஸ்குடன் ஒப்பிடும் போது குறைந்த ரிஸ்க்கை கொண்டது. குறைந்த ரிஸ்க் எடுப்பதன் மூலம் மூலதனத்தைப் பாதுகாத்து, ரிஸ்க்குகளுக்கு ஏற்ப ரிட்டர்ன்களை உருவாக்கும்.

 

பிற ரிஸ்க்குகள் : ரிட்டர்னின் மீதான ரிஸ்க்கை மட்டுமே கருதாமல் பிற ரிஸ்க்குகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணமாக:

லிக்விடிட்டி ரிஸ்க் - முதலீட்டை எவ்வாயு எளிதாக ரொக்கமாக மாற்றலாம் என்பதை லிக்விடிட்டி ரிஸ்க அளவிடும். இந்த ரிஸ்க் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் குறைவானது. அதாவது எளிதாக நமது முதலீட்டை ரொக்கமாக மாற்றலாம் .

பணமாக்குதற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 3 வர்த்தக நாட்களுக்குள் முதலீட்டாளரின் வங்கிக் கணக்குக்கு பணம் பரிமாற்றப்படும்.

சில திட்டங்களில் இருந்து குறிப்பிட்ட காலகட்டத்தினுள் பணமெடுக்கும் போது, வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படலாம்

எனவே முதலீட்டாளர்கள் திட்டத்தை முறையாகப் புரிந்துகொண்டு மதிப்பிடுவதன் மூலமும், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் அல்லது ஒரு முதலீட்டு ஆலோசகரின் வழிகாட்டுதலைப் பெறுவதன் மூலம் ரிஸ்க்கின் இயல்பையும், அளவையும் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

என்னுடைய ரிஸ்க் புரொபைலை நான் எவ்வாறு மதிப்பிடுவது :

ஒவ்வொரு முதலீட்டாளரும் தனிப்பட்டவர்கள். தனிப்பட்ட முதலீட்டு நோக்கங்களை கொண்டவர்கள். எனவே முதலீடு செய்வதற்கு முன் தங்கள் ரிஸ்க் புரொபைலை அளவிடுவது மிகவும் முக்கியமானது.

ரிஸ்க் புரொபைல் :

முதலீட்டாளரின் திறன் மற்றும் விருப்பம் சார்ந்தது.
முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோகஸ்தரையோ அல்லது முதலீட்டு ஆலோசகரையோ தொடர்புகொண்டு தங்களின் ரிஸ்க் புரொபைலை அறிந்து கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

Reviews

There are no reviews yet.

Add a review