Mutual Funds & Shares Differences – மியூச்சுவல் ஃபண்ட்ஸ் & பங்குகள் வேறுபாடுகள்

Mutual Funds & Shares Differences – மியூச்சுவல் ஃபண்ட்ஸ் & பங்குகள் வேறுபாடுகள்

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் & பங்குகள் – வேறுபாடுகள் 
மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்

Mutual Funds & Shares Differences

Why  Invest  in Mutual Fund

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் & பங்குகள் இடையேயுள்ள வேறுபாடுகள் :

பங்குகளில் நாம் நேரடியாக முதலீடு செய்வது என்பது ஒப்பீட்டளவில் அதிய அபாயம் கொண்டது. நிறுவனம் மற்றும் அது சார்ந்த துறையை ஆராய்ந்து பார்த்த பின்பே அதன் பங்குகளை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய பங்கின் செயல்திறனையும் நாம் கண்காணிக்க வேண்டியிருக்கும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் இருந்து ஒருசில நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது என்பது பெரும் பணி.

எனவே நல்ல நிறுவனங்களின் பங்குகளில் நேரடியாக முதலீட்டை மேற்கொள்வதற்கு பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் மூலம் அவற்றில் முதலீடு செய்து, நமது முதலீட்டை பெருக்கிக் கொள்ளலாம்.

 

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டத்தில் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் நிபுணத்துவம் வாய்ந்த ஃபண்ட் மேனேஜர்கள் பங்குகளைத் தேர்ந்தெடுப்பார்கள்.

மியூச்சுவல் ஃபண்டின் செயல் திறனை மட்டும் நாம் கண்காணித்தால் போதும், மியூச்சுவல் ஃபண்டில் உள்ள தனித்தனி பங்குகளை நாம் கண்காணிக்க வேண்டியதில்லை.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டத்தில் Growth / Dividend   தேர்வுகள், Top Up, Systematic Withdrawal Plan / Systematic Transfer Plan  போன்ற முதலீட்டு நெகிழ்வுதன்மைகள் உண்டு. இந்த நெகிழ்வுத்தன்மைகள் பங்கு முதலீட்டில் கிடைக்காது.

மேலும், SIP - முறையில் சிறு தொகையை முதலீடு செய்வதன் மூலம் பங்கு சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் சமாளித்து கொள்ளலாம்.

Reviews

There are no reviews yet.

Add a review

நேரடியாக பங்குகள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்யாமல், எதனால் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் முதலீடு செய்ய வேண்டும்:

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் முதலீடு செய்யும் பொழுது, தொழில் வல்லுனர்களின் உதவியுடன் நீங்கள் பங்குகள், பாண்டுகள் அல்லது பிற முதலீடுகளில் மறைமுக முதலீட்டைச் செய்வீர்கள்.

இந்த பணிகளை நீங்கள் செய்வதைவிட, ஒரு சிறுகட்டணத்தைக் கொடுத்து, ஒரு நிதி மேலாண்மை நிறுவனத்திடம் இருந்து சேவைகளைப் பெறுவீர்கள்.

இந்த சேவைகளில் ஆராய்ச்சி, பல்வேறு முதலீடுகளின் தேர்வு, வாங்கல்-விற்பனை போன்றவைகளும், முதலீட்டு கணக்கியல் மற்றும் நிர்வாகம் போன்ற செயல்களும் இருக்கும். இச் செயல்பாடுகளை ஒரு தகுதி வாய்ந்த ஃபண்ட் மேனேஜர் மேற்கொள்வார்.