Types of Mutual Funds – மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்

Types of Mutual Funds – மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்

மியூச்சுவல் ஃபண்ட்களின் வகைகள்

Different Kinds of Mutual Fund

மியூச்சுவல் ஃபண்ட் - பங்குகளில் மட்டுமே முதலீடு செய்திடுமா:

மியூச்சுவல் ஃபண்ட் - பங்குகளில் மட்டுமே முதலீடு செய்திடும். எனவே அது அபாயம் நிறைந்தது என்ற எண்ணம் நிலவுகிறது. மக்களின் பல்வேறு முதலீட்டுத் தேவைகளுக்கு ஏற்ப பல வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் உள்ளன.

ஈக்விட்டி ஃபண்ட்கள் (Equity Funds) /  குரோத் ஃபண்ட்கள் (Growth Funds) :

ஈக்விட்டி ஃபண்ட்கள் என்பன முதலீட்டில் பெரும்பகுதியை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும்.

நோக்கம் : இந்த வகையான ஃபண்ட்களின் முதன்மை நோக்கம் செல்வத்தை

உருவாக்குதல் / மூலதனத்தைப் பெருக்குதல்

இந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருப்பதினால் அதிக ஏற்றம் இறக்கம் கொண்டிருக்கும்.  எனினும் அதிக ரிட்டர்ன்களை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் நீண்டகால முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாக தேர்வு செய்து கொள்ளலாம்.

வகைகள்:

லார்ஜ் கேப் ஃபண்ட்கள் (Large Cap Funds) :

பெரும் நிறுவனங்களில் பெருமளவில் முதலீடு செய்யக்கூடிய ஃபண்ட்கள்

மிட் கேப் ஃபண்ட்கள் (Mid Cap Funds):

நடுத்தர அளவிலான நிறுவனங்களில் பெருமளவில் முதலீடு செய்யக்கூடிய ஃபண்ட்கள்

ஸ்மால் கேப் ஃபண்ட்கள் (Small Cap Funds) :

சிறு நிறுவனங்களில் பெருமளவில் முதலீடு செய்யக்கூடிய ஃபண்ட்கள்

மல்டி கேப் ஃபண்ட்கள் (Multi Cap Funds):

பெரும், நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களில்; முதலீடு செய்யக்கூடிய ஃபண்ட்கள்

செக்டார் ஃபண்ட்கள் (Sectors Funds):

வர்த்தகத்தின் ஒரு குறிப்பிட்ட வகை நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடிய ஃபண்ட்கள்(எ.கா.டெக்னாலஜி ஃபண்ட்கள் - தொழில் நுட்ப நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யும்)

தீமேட்டிக் ஃபண்ட்கள் (Thematic Funds):

பொதுவான தீமில் முதலீடு செய்யக்கூடிய ஃபண்ட்கள். (உதாரணமாக இன்ஃப்ரஸ்டிரக்சர் ஃபண்ட்கள் - இன்ஃப்ரஸ்டிரக்சர் துறையின் வளர்ச்சியில் இருந்து பலனடையும் நிறுவனங்களில் முதலீடு செய்யும்.

 

டெப்ட் ஃபண்ட் (Debt Fund) / Fixed Income Funds:

அரசாங்கப் பத்திரங்கள் அல்லது பாண்டுகள், கடன்பத்திரங்கள், வங்கி டெபாசிட்களின் சான்றிதழ்கள் மற்றும் Treasury Bills, Commercial Paper    பணச் சந்தை சார்ந்த ஆவனங்கள் போன்ற நிலையான வருமானத்ததை தரும் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன.

இந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முதலீடுகள் மற்றும் வருவாய் உருவாக்கத்துக்கு ஏற்றது. வங்கி அல்லது அஞ்சல் அலுவலக ஃபிக்ஸட் டெபாசிட்கள் அல்லது PPF விட சிறந்த ரிட்டர்ன்களை தருவதோடு வரிப்பலனையும் அளிக்கிறது

உதாரணமாக : லிக்விட் ஃபண்ட்,  ஷார்ட் டெர்ம் ஃபண்ட்,  ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட், கார்ப்பரேட் டெப்ட் ஃபண்ட்,  டைனமிக் பாண்டு ஃபண்ட், கில்டு ஃபண்ட்,

 

ஹைபிரிட் ஃபண்ட் (Hybrid Fund) : 

இந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் ஈக்விட்டி ஃபண்ட்கள் மற்றும் டெப்ட் ஃபண்ட்கள் இரண்டிலும் முதலீடு செய்யும். எனவே சிறந்த வருவாய் உருவாக்கத்தை வழங்கிடும்.

உதாரணமாக: அக்ரசிவ் பேலன்ஸ்டு ஃபண்ட்கள்,  கன்சர்வேட்டிவ் பேலன்ஸ்டு ஃபண்ட்கள், பென்ஷன் திட்டங்கள், குழந்தை திட்டங்கள் மற்றும் மாதாந்திர வருவாய் திட்டங்கள்.

 

ELSS (Equity Linked Savings Scheme):

இது வருமாவரிச்சட்டம் 1961 -இன் பிரிவு 80C - இன் கீழ் ரூ.1.5  இலட்சம் வரை வரிவிலக்கு பெறுவதற்கு தனிநபர் அல்லது HUF -க்கு உதவுகிறது.

இந்த திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் ரூ.50,000 முதலீடு செய்திருந்தால், அந்த தொகை அவரின் மொத்த வரிக்குரிய வருமானத்தில் இருந்து கழிக்கப்பட்டு, அவரின் வரிச் சுமை குறைக்கப்படும்.

இந்த திட்டத்தில், யூனிட்கள் ஒதுக்கப்பட்டதேதியில் இருந்து 3 வருடங்கள் லாக்-இன் காலமாக இருக்கும். லாக்-இன் காலகட்டம் முடிந்த பின்பு, யூனிட்களை பணமாக்கவோ அல்லது ஸ்விட்ச் செய்யவோ முடியும்.

முதலீட்டாளர்கள சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான மூலம் முதலீடு செய்ய முடியும். ஒரு நிதியாண்டில் ரூ.1.5 இலட்சம் வரையிலான முதலீடுகள் வரிவிலக்குக்கு தகுதி பெறுகின்றன.

 

முதலீட்டுக்கு எந்த ஃபண்ட் ஏற்றது என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது:

முதலீட்டாளரின் நோக்கம், கால அளவு, ரிஸ்க் ஏற்பு என்ன ஆகியவை குறித்து உங்களின் ஆலோசகருடன் கலந்து ஆலோசித்தபின் எந்த ஃபண்ட்டில் முதலீடு செய்யலாம் என தீர்மானிக்கலாம்.

நீண்ட கால நோக்கம், ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளவர் எனில் - ஈக்விட்டி ஃபண்ட்கள் ஏற்றதாக இருக்கும்.

பணத்தை சில மாதங்கள் மட்டுமே முதலீடு என்பது குறுகியகால நோக்கமாகம். இவர்களுக்கு லிக்விட் ஃபண்ட்கள் ஏற்றது.

வழக்கமான முறையில் வருமானம் தரக்கூடிய ஒன்றில் முதலீடு செய்ய விரும்பினால் மாதாந்திர வருவாய்த்திட்டம் அல்லது இன்கம் ஃபண்ட் ஏற்றது.

Reviews

There are no reviews yet.

Add a review