Mutual Fund Investment Why & When : மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் & எப்போது

Mutual Fund Investment Why & When : மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் & எப்போது

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்!

எவ்வாறு வரி விலக்கு பெறுவது!

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் எப்போது முதலீடு செய்யத் தொடங்களாம்!

Why Invest in Mutual Funds

How to Get a Tax Exemption

When should we begin investing in mutual funds

 

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்:

தேவைகளின் அடிப்படையில் பல்வேறு முதலீட்டு துறைகளில் நீங்கள் முதலீடு செய்வீர்கள்.

பெரும்பாலான முதலீட்டாளர்களின் கவலை : எந்த வகை முதலீடு தங்களுக்கு சிறந்தது என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது.   அதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள தேவையான திறன்கள், ஆர்வம் மற்றும் நேரம் இல்லாமல் இருக்கலாம்.

ஆதலால் தனது முதலீடுகளை நிர்வகிப்பதற்கு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தொழில்முறை அமைப்பை நாடலாம்.   நமது வெவ்வேறு வகையான நோக்கங்களை பூர்த்தி செய்கின்ற பல்வேறு துறைகளை மியூச்சுவல் ஃபண்ட் வழங்குகிறது.   அதிலிருந்து முதலீட்டாளர்கள தங்களின் தனிப்பட்ட நோக்கத்தை (Financial Goal / Need)  அடைய உதவும் பொறுத்தமானவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் நிகர சொத்து மதிப்புகளின் (NAV – Net Asset Value ) மூலம் போர்ட்ஃபோலியோகளின் வளர்ச்சியை கணக்கிடுதல், அறிக்கை கொடுத்தல், ஆவணப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளையும் மேற்கொள்ளும்.

முதலீட்டாளர்கள் தங்களின் எதிர்காலத் தேவைகளுக்காக பணத்தை முதலீடு செய்ய மியூச்சுவல் ஃபண்ட் சிறந்தது. அவர்களின் முதலீட்டு தொகையை நிபுணர்கள் குழு நிர்வகித்திடும். முதலீட்டாளர்கள் முதலீட்டின் நன்மையை பெற்றுக்கொள்ளலாம்.

 

மியூச்சுவல் ஃபண்டுகள் வேறு என்ன செய்ய முடியும்:

மியூச்சுவல் ஃபண்டுகள் வரியை சேமிக்க முடியும்! ஆம்,  வரி விலக்குகளைப் பெற ELSS ல் (Equity Linked Savings Scheme) இல் முதலீடு செய்யுங்கள்

 

Reviews

There are no reviews yet.

Add a review

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் எப்போது முதலீடு செய்யத் தொடங்களாம்:

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது / அதிகபட்ச வயது என ஏதும் இல்லை. ஒருவர் சம்பாதிக்க / சேமிக்க தொடங்கிய உடன் மியூச்சுவல் /பண்ட்ஸில் முதலீடு செய்ய தொடங்களலாம்.

சில திட்டங்கள் நீண்ட கால கட்டத்தில் வளர்ச்சியையும், சில திட்டங்கள் குறுகியகாலத்தில் வளர்ச்சியைக் கொடுப்பதாகவும் உள்ளன. முதலீட்டாளர்கள் தங்களுக்கு நோக்கங்களுக்குப் பொருத்தமான வெவ்வேறு திட்டங்களில் தேவையானவையை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.