Mutual Fund Investment Period & Withdrawal Time முதலீட்டு காலம் & திரும்ப எடுத்தல்

Mutual Fund Investment Period & Withdrawal Time முதலீட்டு காலம் & திரும்ப எடுத்தல்

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் எத்தனை காலத்துக்கு ஒருவர் தனது முதலீட்டைத் தக்க வைக்க வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் குறுகிய காலத்துக்கானதா அல்லது நீண்டகாலத்துக்கானதா?

நீண்டகால முதலீட்டால் குறைந்த ரிஸ்க் இருக்குமா?

என் முதலீட்டை நான் எப்போது வெளியே எடுக்கலாம்?

 

 

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் எத்தனை காலத்துக்கு ஒருவர் தனது முதலீட்டைத் தக்க வைக்க வேண்டும்?

“கால அளவு” அதாவது முதலீட்டாளர் தனது முதலீட்டைத் தக்கவைக்க வேண்டிய நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் எவ்வளவு.

எவ்வளவு காலத்துக்கு முதலீட்டைத் தக்கவைத்தால் நிதி இலக்கை அடைய முடியும் என்பதை பொறுத்தது.

எவ்வளவு காலம் முதலீட்டைத் தக்க வைக்க வேண்டும் என்பது, ஒருவரின் முதலீட்டு நோக்கத்தைப் பொறுத்து உள்ளது. முதலீட்டாளர்கள் தங்களின் ஆலோசகர்களுடன் இணைந்து அவ்வப்போது தங்களின் முதலீட்டின் நிலையையும் முன்னேற்றத்தையும் மறுஆய்வு செய்யவேண்டும். இந்த மறுஆய்வுகளின் போது, முதலீட்டைப் பணமாக்குவதா, ஸ்விட்ச் செய்வதா அல்லது அப்படியே விட்டுவிடுவதா என்ற முடிவுகள் வழக்கமாகச் செய்யப்படும்.

 

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் குறுகிய காலத்துக்கானதா அல்லது நீண்டகாலத்துக்கானதா?

நீண்டகாலம். குறுகிய காலம். உங்கள் விருப்பம்.

“குறுகிய காலத்துக்கான நல்ல முதலீட்டுத் திட்டமாக மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இருக்கலாம்.”

“ஆனால் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டை பொருத்தவரை, நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். முடிவுகளைப் பெறுவதற்கு காலம் எடுக்கும்.”

அது ஒருவரின் முதலீட்டு இலக்குகளைப் பொறுத்தது.

பெரும்பாலான இலக்குகள் காலத்தைச் சார்ந்து இருக்கின்றன. குறுகிய காலத்துக்குப் பொருத்தமான திட்டங்களும், நீண்டகாலத்துக்குப் பொருத்தமான திட்டங்களும், மற்றும் இடைப்பட்ட காலத்துக்குப் பொருத்தமான திட்டங்களும் உள்ளன.

உங்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோகஸ்தர் ஆலோசித்து, உங்களின் நிதி இலக்குகள் குறித்து கலந்துரையாடிய பின்னர், எதில் முதலீடு செய்வது என்பதைத் நீங்கள் தீர்மானித்திடுங்கள்.

உதாரணத்திற்கு:

  • நீண்டகால முதலீடு எனில் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் - வழக்கமாக 5 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள்.

நிலையான வருமானம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் எனில் -

  • லிக்விட் ஃபண்ட்ஸ் - குறுகிய காலகட்டத்துக்காக – 1 வருடத்துக்கும் குறைவாக
  • குறுகியகால பாண்ட் ஃபண்ட்கள் – நடுத்தர காலகட்டத்துக்காக – 1 முதல் 3 வருடங்கள் வரை
  • நீண்டகால பாண்ட் ஃபண்ட்கள் - நீண்டகாலத்துக்காக – 3 வருடங்கள் மற்றும் அதற்கும் மேல்

 

நீண்டகால முதலீட்டால் குறைந்த ரிஸ்க் இருக்குமா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸிலான முதலீடுகளுக்கு பொருத்தமான கால அளவு தேவை. சரியான கால அளவிலான முதலீடு, எதிர்பார்க்கப்படும் முதலீட்டு ரிட்டர்ன்களை பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை மட்டுமல்லாது,  முதலீட்டில் உள்ள ரிஸ்க்கையும் குறைத்திடும்.

“ரிஸ்க்” என்றால் என்ன?

எளிமையான மொழியில், முதலீட்டுச் செயல்திறனின் ஏற்ற, இறக்கங்கள் மற்றும் முதலீட்டு மூலதனத்தின் தேய்மான வாய்ப்புகள் என்று ரிஸ்க்கை குறிப்பிடலாம்.

நீண்டகாலத்துக்கு முதலீட்டைச் செய்வதன் மூலம், ஒருசில வருடங்களில் ஏற்படும் குறைந்த / எதிர்மறையான ரிட்டர்ன்களும், ஒருசில வருடங்களில் ஏற்படும் நல்ல ரிட்டர்ன்களும் ஒன்றிணைந்து நியாயமான சராசரி ரிட்டர்ன்களை வழங்கிடும். எனவே, வருடாவருடம் மாறுபடுகின்ற ரிட்டர்ன்களின் சராசரியின் மூலம் நிலையான நீண்டகால ரிட்டர்னை முதலீட்டாளர்கள் பெறமுடியும்.

ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் வகைக்கும்,  பரிந்துரைக்கப்படும் கால அளவு மாறுபடக்கூடும்.

என் முதலீட்டை நான் எப்போது வெளியே எடுக்கலாம்?

ஒரு ஓப்பன் எண்டு திட்டத்தில் உள்ள முதலீட்டை எந்த சமயத்திலும் பணமாக்க முடியும்.

3 வருட லாக்-இன் காலகட்டம் கொண்ட ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டம் (ELLS) தவிர பிற திட்டங்களில் முதலீட்டைப் பணமாக்குவதற்கான கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது.

தங்களின் முதலீட்டைப் பணமாக்கும் போது பொருந்தக்கூடிய வெளியேற்றக் கட்டணங்களை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

பொருந்தக்கூடிய பட்சத்தில் மட்டுமே, வழங்கப்படக்கூடிய இறுதித் தொகையில் இருந்து வெளியேற்றக் கட்டணங்கள் கழிக்கப்படும்.

குறுகிய கால அல்லது ஊக அடிப்படையிலான முதலீட்டாளர்கள் திட்டத்தினுள் நுழைவதைத் தடுப்பதற்காகவே இந்த வெளியேற்றக் கட்டணத்தை AMC  கள் விதிக்கின்றன.

குளோஸ்டு எண்டு திட்டங்கள் முதிர்வின் போது தானாக பணமாக்கப்படும் என்பதால், அவற்றில் வெளியேற்றக் கட்டணம் விதிக்கப்படுவதில்லை.

எனினும், குளோஸ்டு எண்டு திட்டங்களின் கீழ் உள்ள யூனிட்கள், ஒரு அங்கீகரிக்கப்பட்ட பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் மற்றும் இந்தப் பங்குச்சந்தையின் மூலம் மட்டுமே முதலீட்டாளர்கள் தங்களின் யூனிட்களை மற்றவர்களுக்கு விற்கமுடியும்.

எளிதாகப் பணமாக்கக்கூடிய இந்தியாவிலுள்ள முதலீட்டுத் துறைகளில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சிறந்த ஒன்று.

Reviews

There are no reviews yet.

Add a review