Mutual Fund for Small Investor – சிறு முதலீட்டாளருக்கு மியூச்சுவல் ஃபண்ட்

Mutual Fund for Small Investor – சிறு முதலீட்டாளருக்கு மியூச்சுவல் ஃபண்ட்

சிறு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஓர் உகந்த முதலீடு.

₹500 தொகையில் முதலீட்டைத்தொடங்கலாம்

 

சிறு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஓர் உகந்த முதலீடாக இருக்குமா?

ஆமாம்! சுமாரான சேமிப்பு அல்லது குறைந்த அளவிலான தொகையுடன் முதலீட்டைத் தொடங்க விரும்பும் ஒரு முதலீட்டாளருக்கு கூட,  மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஓர் உகந்த முதலீடாக இருக்கும்.

சிறிய மற்றும் பெரிய அளவிலான எல்லா முதலீட்டாளர்களுக்கும் சேவிங்க்ஸ் பேங்க் (SB) கணக்கு இருக்கும். இந்தக் கணக்கைக் கொண்டுள்ள எந்தவொருவரும் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் முதலீடு செய்யத் தொடங்கலாம்.

மாதாமாதம் குறைந்தது ₹ 500 தொகையிலிருந்து கூட தொடங்க முடியும். வழக்கமான முதலீட்டை செய்வதற்கு ஆரோக்கியமான பழக்கத்தை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஏற்படுத்திடும்.

 

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் சிறு முதலீட்டாளருக்கான பிற நன்மைகள்

₹500 தொகையில் முதலீட்டைத்தொடங்கி, அதனை என்னால் தொடர்ந்து செய்ய முடியுமா?

பிரபலமான முதலீட்டுக் கோட்பாடு ‘ஆரம்பக் கட்டத்திலேயே தொடங்குதல், வழக்கமாக முதலீடு செய்தல், நீண்டகாலத்துக்கு முதலீட்டைத் தக்கவைத்தல்’.

₹500 என்ற அளவிலான குறைந்த தொகையைக் கொண்டு கூட நீங்கள் முதலீடு செய்ய முடியும். என்றாலும், அந்த முதலீட்டை ஆரம்பக்கட்டத்திலேயே தொடங்க வேண்டியது அவசியமானது.

காலப்போக்கில், உங்கள் முதலீட்டுத் தொகையை அதிகப்பதற்குப் பல வழிகள் உள்ளன.

  • ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், ஒரே ஃபண்ட்ஃ கணக்கில் நீங்கள் கூடுதல் பர்சேஸ்களை செய்ய முடியும். பெரும்பாலான ஃபண்ட் ஹவுஸ்களில், ₹ 100 தொகையை கூட உங்களால் கூடுதலாக முதலீடு செய்ய முடியும்
  • அல்லது பிற திட்டங்களில் இருந்து பணத்தைப் பரிமாற்றவோ அல்லது திட்டங்களை ஸ்விட்ச் செய்யவோ முடியும்.
  • நீங்கள் ஒரு சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் (SIP) முதலீடு செய்யத் தொடங்கலாம். இதனை வங்கியில் செய்யப்படும் தொடர் வைப்பு போன்று, வழக்கமான முறையில் முதலீடு செய்ய முடியும். மேலும், வருடாவருடம் ஊதியம் அல்லது வருமானம் அதிகரிக்க அதிகரிக்க, படிப்படியாக ஒவ்வொரு வருடமும் SIP பங்களிப்பை அதிகரித்துக் கொள்ள பெரும்பாலான AMC - கள் தங்களின் முதலீட்டாளர்களிடம் பரிந்துரைக்கின்றன.
  • பரிவர்த்தனை செய்ய எளிதானது - முதலீடு செய்தல், மறு ஆய்வு செய்தல், நிர்வகித்தல் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்களை பணமாக்குதல் ஆகிய அனைத்துமே எளிய செயல்முறைகள்தான்
  • எளிமையான முறையில் பணமாக்குதல், அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் வெளிப்படுத்தல், உரிய நேரத்திலான கணக்கு அறிக்கைகள் மற்றும் வரி நன்மைகள் இவை அனைத்தையும், சிறு அல்லது முதன்முறை முதலீடு செய்யும் நபர் ஆராய்ந்து பார்க்க வேண்டும்
  • முதலீட்டின் அளவு ₹ .500 ஆக இருந்தாலும், ₹ 5 கோடியாக இருந்தாலும், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஒரே மாதிரியான முதலீட்டுச் செயல்திறனையே கொடுக்கும். எனவே, சிறு முதலீட்டாளராக இருந்தாலும், பெரிய முதலீட்டாளராக இருந்தாலும், ஒவ்வொரு முதலீட்டாளரின் நலனையும் அது கருத்தில் கொள்ளும்
  • மாதம் ₹ 500 முதலீடு செய்யும் நபரின் முதலீடுகூட, தொழில்முறையாக நிர்வகிக்கப்பட்டு, பரந்த அளவிலான போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்யப்படுகிறது.

 

Reviews

There are no reviews yet.

Add a review