Crop Insurances (பயிர் காப்பீடு)

Crop Insurances (பயிர் காப்பீடு)

0.00

Scheme Name : Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)

Ministry of Agriculture & Farmers Welfare

நோக்கங்கள்:
  • இயற்கை பேரிடர், பூச்சிகள் மற்றும் நோய்கள் விளைவாக பயிர்களில் ஏதேனும் சேதாரம் ஏற்படும் பொழுது , விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி உதவி வழங்குதல்
  • விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்தி விவசாயத்தில் அவர்கள் தொடர்வதை உறுதி செய்தல்
  • புதுமையான மற்றும் நவீன விவசாய முறைகளை பின்பற்ற விவசாயிகளை ஊக்குவித்தல்
  • விவசாயத் துறைக்கு கடன் வருவதை உறுதி செய்தல்.
அமலாக்க நிறுவனங்கள் :
  1. மத்திய அரசு (Department of Agriculture, Cooperation & Farmers Welfare (DAC&FW), Ministry of Agriculture & Farmers Welfare (MoA&FW), Government of India (GOI)
  2. மாநில அரசு

 

திட்டத்தின் பயன்:

மகசூல் இழப்புகள் (நிலைப் பயிர்கள், அறிவிக்கப்பட்ட பகுதி அடிப்படையில்):

தடுக்க முடியாத பின்வரும் அபாயங்களால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுகட்ட காப்பீடு வழங்கப்படுகிறது

  • இயற்கை தீ
  • மின்னல்
  • புயல்
  • ஆலங்கட்டி மழை
  • சூறாவளி
  • வெள்ளம்
  • நிலச்சரிவு
  • வறட்சி & வறண்ட காலங்கள்
  • பூச்சிகள் & நோய்கள்

 

.அறுவடைக்கு பிந்தைய இழப்புகள் (தனிப்பட்ட பண்ணை அடிப்படையில்):

பயிரிடப்பட்ட பயிர்களுக்கு அறுவடையிலிருந்து அதிகபட்சம் 14 நாட்கள் வரை, அறுவடைக்குப் பிறகு குறிப்பிட்ட (சூறாவளி மழை) போன்றஆபத்துகளுக்கு எதிராக காப்பீடு கிடைக்கும்.

அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்கள்.

 

Reviews

There are no reviews yet.

Add a review