இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட “ஈரோடு சின்ன நாடன் ரகம்” மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்ட தரமான “மஞ்சள் தூள்”.
மஞ்சளில் உள்ள சத்துக்கள் :
வைட்டமின்-C, வைட்டமின்-B6 உள்ளது . கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற தனிமங்களும் நல்ல அளவில் உள்ளன.
மஞ்சள் பயன்கள் :
மஞ்சள் இயற்கையான பாக்டீரிய எதிர்ப்புப் பொருளாகவும், ஆன்டிசெப்டிக் மருந்தாகவும் பயன்படுகிறது, சிறிய வெட்டுக்காயமோ தீக்காயமோ ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பகுதியில் மஞ்சள் பொடியை சிறிதளவு தூவிவிட்டால், விரைவில் குணமடையும்.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து, தினமும் ஒரு முறை அருந்தினால் ஜலதோஷம், இருமல் போன்ற பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
தினமும் காலையில் வெது வெதுப்பான நீரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்து வர வறட்டு இருமல் குணமாகும்.
கல்லீரலில் சேரும் நச்சை அகற்றும். செரிமானத்தை எளிதாக்குவதுடன், கருப்பை நீர்க்கட்டிகளையும் குறைக்கிறது. புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.
முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை “ப்ளீச்”சாக செயல்படுகிறது.
Reviews
There are no reviews yet.