Mutual Fund Investment Option – மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வகைகள்

Mutual Fund Investment Option – மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வகைகள்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு முறை

SIP (Systematic Investment Plan)

Lumpsum Investment

மியூச்சுவல் ஃபண்டுகளில் எப்படி முதலீடு செய்யலாம் ?

மியூச்சுவல் ஃபண்டுகளில் (மொத்தமாகவோ)  Lumpsum அல்லது SIP மூலமாகவோ முதலீடு செய்யலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வகை :

குறைந்த அளவிலான தொகையுடன் முதலீட்டைத் தொடங்க விரும்பும் ஒரு முதலீட்டாளருக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு உகந்ததாக இருக்கும்.

SIP (Systematic Investment Plan) என்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய வழங்கப்படும் ஒரு முதலீட்டு வழியாகும். இம்முறையில் நாம் மாதாமாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என்ற வழக்கமான கால இடைவெளியில் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

ஒருவர் மாதம் ரூ.500 என்ற அளவிலான சிறு தொகையை கூட தவணையாக செலுத்த முடியும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை பற்று வைப்பதற்கு உங்கள் வங்கிக்கு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷனை வழங்க முடியும் என்பதால் இது வசதியானது.

  •  சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் சந்தையின் நேரம் போன்றவை குறித்த எந்த கவலையுமின்றி முதலீடு செய்ய உதவுகிறது
  • நீண்ட கால முதலீட்டு திட்டதிற்கு ஏற்றது
  • அதிக ரிட்டர்ன்களை பெற, ஆரம்ப காலத்திலேய முதலீட்டை தொடங்க SIP சிறந்தது

 

  • SIP -யை தொடங்குவதும் நிறுத்துவதும் எளிதானது, வசதியானது
  • ஒன்றிரண்டு தவனைகளை தவற விட்டாலும் அபராதம் விதிக்கப்படாது
  • தவனை தவறும்போது SIP நிறுத்தப்படும்
  • அதே ஃபோலியோவில் மீண்டும் இன்னொரு SIP தொடங்கிக் கொள்ளலாம். அது புதிய SIP ஆக கருதப்படும். புதிய SIP தொடங்க சிறிது காலம் எடுக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு வகையை தேர்வு செய்வது :

ஒரு நிதி இலக்கிற்காக (Financial Goal – Ex. Child Education, Marriage, Retirement)  நீண்ட காலம் நீங்கள் முதலீடு செய்வதாக இருந்தால் SIP பொருத்தமானது.

உங்களின் மாதாந்திர வருமானத்தில் இருந்து சேமிக்க / முதலீடு செய்ய விரும்பினால் / பணத்தை பெருக்க கூடிய திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் SIP யை தேர்வு செய்யுங்கள்.

ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதியவர்கள் எனில் SIP  சிறந்தது

போனஸ், சொத்து விற்பனையில் இருந்து பெறப்பட்ட பணம் அல்லது ஓய்வுகாலத் தொகை போன்ற அதிகப்படியான தொகை இருந்தால் டெப்ட் அல்லது லிக்விட் ஃபண்டில் (Lumpsum)  ஒட்டு மொத்தத் தொகையாக முதலீடு செய்யலாம்.

குறைந்த வயது, ரிஸ்க் எடுக்கும் தன்மை அதிகம் எனில் ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் (Lumpsum)ஒட்டு மொத்தத் தொகையாக முதலீடு செய்யலாம்.

Reviews

There are no reviews yet.

Add a review