Assured Pension for Unorganized workers – அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

Assured Pension for Unorganized workers – அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

0.00

Scheme Name :  Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana  

Ministry of Labour & Employment

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களின் முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான அரசு திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு 60 வயதை அடைந்த பிறகு, குறைந்தபட்சம் ரூ. 3000 / மாதம்  ஓய்வூதியம் வழங்கப்படும்.

18 வயது முதல் 40 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள்,  60 வயதை அடையும் வரை மாதந்தோறும் ரூ.55 முதல் ரூ.200 வரை  தொகை செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர் 60 வயதை அடைந்தவுடன்அவர் / அவள் ஓய்வூதியத் தொகையை கோரலாம். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட ஓய்வூதியத் தொகை அந்தந்த நபரின் ஓய்வூதியக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

மேலும் தொழிலாளர் இறந்தால், தொழிலாளியின் மனைவிக்கு 50%  ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாகப் பெற உரிமை உண்டு. . குடும்ப ஓய்வூதியம் மனைவிக்கு மட்டுமே பொருந்தும்.

பயணாளர்கள் பிற சட்டரீதியான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்களாக இருக்க கூடாது

தகுதி :
  • அமைப்புசாரா தொழிலாளர்களாக இருக்க வேண்டும்
  • நுழைவு வயது 18 முதல் 40 வயது வரை
  •  மாத வருமானம் ரூ.15,000 க்குள்
சிறப்பு அம்சங்கள் :
  • உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3000 / மாதம்
  • தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
  • இந்திய அரசாங்கத்தின் இணையான பங்களிப்பு
தேவையான ஆவனங்கள் :

ஆதார் அட்டை
சேமிப்பு வங்கி கணக்கு

அமைப்புசாரா தொழிலாளர்கள்:
  • வீட்டுத் தொழிலாளர்கள்
  • தெருவோர வியாபாரிகள்
  • மதிய உணவுத் தொழிலாளர்கள்
  • சுமை தூக்குபவர்கள்
  • செங்கல் சூளைத் தொழிலாளர்கள்
  • செருப்புத் தொழிலாளிகள்
  • வீட்டுப் பணியாளர்கள்
  • சலவைத் தொழிலாளர்கள்
  • ரிக்க்ஷா இழுப்பவர்கள்
  • நிலமற்ற தொழிலாளர்கள்
  • சொந்தக் கணக்குத் தொழிலாளர்கள்
  • விவசாயத் தொழிலாளர்கள்
  • கட்டுமானத் தொழிலாளர்கள்
  • பீடித் தொழிலாளர்கள்
  • கைத்தறித் தொழிலாளர்கள்
  • தோல் தொழிலாளர்கள்
  • ஆடியோ காட்சித் தொழிலாளர்கள்
  • இதே போன்ற பிற தொழில்களில் உள்ள தொழிலாளர்கள்

 

Reviews

There are no reviews yet.

Add a review