Assured Pension for Small & Marginal Farmers – சிறு & குறு விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்

Assured Pension for Small & Marginal Farmers – சிறு & குறு விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்

0.00

Scheme Name: Pradhan Mantri Kisan Maandhan Yojana  (PMKMY)

Ministry of Agriculture & Farmers Welfare

பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்பது சிறு மற்றும் குறு விவசாயிகளின் முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான மத்திய அரசு திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 60 வயதை அடைந்த பிறகு, குறைந்தபட்சம் ரூ.3000/ மாதம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

18 வயது முதல் 40 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள்,  60 வயதை அடையும் வரை மாதந்தோறும் ரூ.55 முதல் ரூ.200 வரை  தொகை செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர் 60 வயதை அடைந்தவுடன்அவர் / அவள் ஓய்வூதியத் தொகையை கோரலாம். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட ஓய்வூதியத் தொகை அந்தந்த நபரின் ஓய்வூதியக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

மேலும் விவசாயி இறந்தால், விவசாயியின் மனைவிக்கு 50%  ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாகப் பெற உரிமை உண்டு. . குடும்ப ஓய்வூதியம் மனைவிக்கு மட்டுமே பொருந்தும்.

பயணாளர்கள் பிற சட்டரீதியான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்களாக இருக்க கூடாது

 

தகுதி :
  •  சிறு மற்றும் குறு விவசாயிகள்
  • நுழைவு வயது 18 முதல் 40 வயது வரை
  • 2 ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நிலம் (01.08.2019 அன்று மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் நிலப் பதிவேடுகளில் உள்ள பெயர்கள்,  திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியுடையவை.
சிறப்பு அம்சங்கள் :
  • உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3000 / மாதம்
  • தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
  • இந்திய அரசாங்கத்தின் இணையான பங்களிப்பு

 

தேவையான ஆவனங்கள் :

ஆதார் அட்டை
சேமிப்பு வங்கி கணக்கு
பட்டா / சிட்டா

Reviews

There are no reviews yet.

Add a review