A Special Micro-Credit Facility for Street Vendors – தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண்கடன் வசதி
A Special Micro-Credit Facility for Street Vendors – தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண்கடன் வசதி
₹0.00
Scheme Name : PM Street Vendor’s AtmaNirbhar Nidhi (PM SVANidhi)
Ministry of Housing and Urban Affairs
மத்திய அரசு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட திட்டம்
நோக்கங்கள்:
- ரூ 10,000 வரையிலான (Working Capital Loan)செயல்பாட்டு மூலதனக் கடனை எளிதாக்குதல்
- வழக்கமாக தவனை திருப்பிச் செலுத்துவதை ஊக்குவித்தல்
- டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி அளித்தல்
இந்தத் திட்டம்,
மேற்கண்ட நோக்கங்களுடன் தெருவோர வியாபாரிகளை முறைப்படுத்தவும் புதிய வாய்ப்புகளின் மூலம் பொருளாதார ரீதியில் முன்னேறவும் உதவும்.
நகர்ப்புறங்களில் வியாபாரம் செய்யும் அனைத்து தெருவோர வியாபாரிகளுக்கும் இந்தத் திட்டம் கிடைக்கும்.
சுருக்கமான விவரங்கள்
- நகர்ப்புற தெருவோர வியாபாரிகள் ரூ. 10,000/- வரையிலான செயல்பாட்டு மூலதன (Working Capital l Loan) கடனைப் பெற தகுதியுடையவர்கள்
- 1 வருட கால அவகாசத்துடன் மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்
- இந்தக் கடனுக்காக, கடன் வழங்கும் நிறுவனங்களால் பிணை எடுக்கப்படாது.
- சரியான நேரத்தில் அல்லது முன்கூட்டியே திருப்பிச் செலுத்தினால், விற்பனையாளர்கள் மேம்படுத்தப்பட்ட வரம்புடன் கூடிய செயல்பாட்டு மூலதனக் கடனின் அடுத்த சுழற்சிக்கு தகுதி பெறுவார்கள்
- திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னர் திருப்பிச் செலுத்துவதற்கு விற்பனையாளர்களிடமிருந்து முன்கூட்டியே செலுத்துதல் அபராதம் விதிக்கப்படாது
வட்டி விகிதங்கள்:
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, அந்தந்த கடன் வழங்குநர் & கடன் வகைக்கு ஏற்றவாறு இருக்கும்.
வட்டி மானியம்
இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விற்பனையாளர்கள் @7% வட்டி மானியம் பெற தகுதியுடையவர்கள். வட்டி மானியத் தொகை காலாண்டுக்கு ஒருமுறை கடனாளியின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
Reviews
There are no reviews yet.